அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இப்படி தோன்றும் கருவளையத்துக்கு இயற்கையான முறையில் தீர்வுகள் .
உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை காட்டனில் நனைத்து அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும். எலுமிச்சை சாறு தக்காளி சாற்றை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
புதினா இலைகளில் உள்ள வைட்டமின் சி கருவளையம் போக்க மிகவும் உதவுகிறது.மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. எனவே புதினா இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து அதனை கண்களில் மேல் தடவி 10நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் தூங்கும் முன் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்.
வெள்ளரிக்காய் துண்டு – 3, உருளைக்கிழங்கு துண்டுகள் – 3, தேன் – 1 டீஸ்பூன், கற்றாலை ஜெல் – 1 டீஸ்பூன், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்களையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். இதில் தேனும் கற்றாலை ஜெல்லும் சேர்த்து நன்கு கலக்கவும். ஹோம்மேட் தேன் ஐ பேக் ரெடி. இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும்.
மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் மறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும். கற்றாழை சருமத்தின் வறட்சியை நீக்கி சருமத்தின் செல்களுக்கு சக்தியை தரும். மேலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். இதனை பயன்படுத்தி கருவளையத்தை நீக்க முடியும். இதற்க்கு கற்றாழையை எடுத்து அதனுள் உள்ள ஜெல்-ஐ எடுத்து நம்முடைய கண்களில் மேல் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்த நீரால் கழுவ வேண்டும்.