சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, S11 தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 13.06.2021 அன்று மதியம், தாம்பரம், இந்து மிஷன் மருத்துவமனை அருகில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது,
அங்கு ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருந்த 5 நபர்கள் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் AmBiSome (Liposomal Amphotericin) மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த 1.சரவணன், வ/36 வண்டலூர் 2.நிர்மல்குமார், வ/38 சிட்லபாக்கம் 3.விக்னேஷ், வ/26 தஞ்சாவூர் 4.அறிவரசன், வ/30 திருவண்ணாமலை 5.தம்பிதுரை, வ/26 திருவண்ணாமலை ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 17 குப்பிகள் AmBiSome (Liposomal Amphotericin) மருந்துகள், 1 கார் மற்றும் 2இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்ற எதிரிகள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.