திருநெல்வேலி: சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இந்தியா மார்ட் போன்றவற்றில் ஒரு மருத்துவ பிரதிநிதி போல் ஒரு பக்க திரை உருவாக்கி கொரோனோ மற்றும் கருப்பு பூஞ்சைக்கு மருந்து உள்ளதாக விளம்பரம் செய்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் இணையதளத்தில் அவசர தேவைக்காக மருந்தை தேடும் போது போலி Customer care எண்ணை தொடர்பு கொண்டு பேசும்போது சைபர் குற்றவாளிகள் பணத்தை online payment மூலம் கட்ட சொல்கின்றனர். பணம் தனது Account வந்து சேர்ந்ததும் நம்பரில் உள்ள போனை switch off செய்து ஏமாற்றி விடுகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இணையதள பக்கத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்தல் வேண்டும்.
இணையதள பிரதிநிதிகளுடன் பேசும்போது எச்சரிக்கையுடன் தனிப்பட்ட விவரங்களை பகிராமல் பேசவேண்டும்.
நம்பகத்தன்மை உள்ள நபரை தொடர்புகொண்டு ஆர்டர் செய்வது நல்லது சைபர் கிரைம் குற்றங்களை பதிவு செய்ய நம்பர் 155260 தொடர்பு கொள்ளவும்.
ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ல் புகார் அளிக்கவும்.