திருச்சி : திருச்சி மாவட்டம், 17.11.2020 நேற்று லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில், மூர்த்தி (வயது 40) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பழனியம்மாள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல குழு உறுப்பினர் திரு. பிரபு ஆகியோர் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவரை தீரன் நகர் வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டது.உடன் சமூக ஆர்வலர்கள் பாலு, மணிகண்டன், ஆண்டனி ஆகியோர் இருந்தனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்