பெரம்பலூர்: கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வார தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேலா கருணை இல்லத்தில் வசித்து வரும் 85 நபர்களின் பசியினை போக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு உணவிற்கு தேவையான மளிகை பொருட்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது NGO. Dr.புவணேஷ்வரி, பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் திருமதி.ரஞ்சனா ஆகியோர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அவர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஒரு முடிவிற்கு கொண்டு வர முடியும். அதனால் நீங்கள் அரசின் உத்தரவினை பின்பற்றுங்கள் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக..பெரம்பலூர் மாவட்ட காவல்துறை