திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திரன் முன்னிலையில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக இன்று (18.03.2026) கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விரிவான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
குறிப்பாக இணையவழி நிதி மோசடிகள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவற்றிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டன. மேலும், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் இணையதளம் (www.cybercrime.gov.in) மற்றும் அவசர உதவி இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















