கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேரிமேல்விளை பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணர் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணன். தம்பி பிரபுராஜின்(34). மனைவி வீட்டை விட்டு பிரிந்து சென்றதற்கு தாய் காரணமென தாயை தாக்கிய பிரபுராஜனை தட்டிக்கேட்ட அண்ணன் மணிகண்டன் (36). என்பவர், தகராறில் கம்பியால் தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈத்தாமொழி போலீசார் கொலை செய்த அண்ணன் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















