கோவை : மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் மீது கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இந்து கடவுள்களை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கமலஹாசன் போட்டியிடுகிறார் என்றவுடன் அந்த தொகுதி நட்சத்திர தொகுதி ஆகிவிட்டது. எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் அகில இந்திய அளவில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கமலஹாசன் தினமும் ஒவ்வொரு விதமாக பிரச்சார உத்தியை கையாண்டு தேர்தல் பிரசரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இரவு இந்து கடவுள்கள் போல வேடமணிந்த நாடக நடிகர்களுடன் கமலஹாசன் கோவை ராமர் கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்தார் .இதுகுறித்து கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பழனி குமார் என்பவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார் .புகாரின் பேரில் தேர்தல் அலுவலர் வழக்குப்பதிவு செய்ய கோவை காட்டூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து கோவை காட்டூர் போலீசார் கமலஹாசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்