கும்பகோணம், பிப்.18- தஞ்சை மாவட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் செயல்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா IPS அவர்களின் உத்தரவின்படி கும்பகோணம் உட்கோட்ட துணைக் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர். கீர்த்திவாசன் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜா, காவலர்கள். பாலசுப்ரமணியன், நாடிமுத்து, ஜனார்த்தன், சுரேஷ், சேவியர்,பிரகாஷ் ஆகிய போலீசார் கும்பகோணம் பகுதியில் தீவிர கண்காணிப்பு,மற்றும் வாகன சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் கேண்டினில் கடந்த மூன்று மாதங்களாக சமையல் சம்மந்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் கல்லூரியில் உள்ள மின்சாதன பொருட்கள் தொடர்ந்து திருடு போகிறது என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறு கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது.
இப்புகாரின் அடிப்படையில் கும்பகோணம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள் இதில் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக பொருட்களை திருடி வந்தது கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த ரவி மகன்களான அருண் 25, அஜித் 22, மற்றும் இவர்களின் கூட்டாளியான கும்பகோணம் பெருமாண்டி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ் என தெரிய வந்தது அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் திருடி வைத்திருந்த பொருள்கள் மற்றும் இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நமது செய்தியாளர் குடந்தை
ப-சரவணன்