தூத்துக்குடி : ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னக்காயல் புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த (29.09.2022), அன்று முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கி 08.10.2022 ஆகிய 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு புன்னக்காயல் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி பள்ளி மற்றும் புன்னக்காயல் ஊர் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே பெண்களுக்கான கபடி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கபடி போட்டியில் புன்னக்காயல் செயின்ட் ஜோசப் பள்ளி, வீரபாண்டியபட்டினம் வாவு கல்லூரி, தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி உட்பட 11 பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 11 அணிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டனர். மேற்படி பெண்களுக்கான கபடி போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் ,அவர்கள் (01.10.2022) துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன், திருச்செந்தூர் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரகு, ஆத்தூர் தனிப்பிரிவு காவலர் திரு. ஜெபராஜ் ரமேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் ஆலய பங்குத் தந்தை திரு. பிராங்கிளின், ஊர் கமிட்டி தலைவர் திரு. எடிசன் உட்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.