திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS..,அவர்களின் உத்தரவு படி பல்வேறு கட்டமாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி லிசா ஸ்டெபிலா தெரஸ் அவர்களின் அறிவுரையின் படி நாங்குநேரி காவல் ஆய்வாளர் திரு ஜோசப் ஜெட்சன் அவர்கள் நாங்குநேரி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
மேலும் அனைத்து சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் கொரானா பரிசோதனையும் செய்யப்பட்டது. பின் காவல்துறையினர் மூலம் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு, முககவசம் அணிந்து,சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுரை வழங்கினார்கள்.