காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி, விஷணுகாஞ்சி, காஞ்சிதாலுக்கா, பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி மற்றும் கன்னக்களவு போன்ற குற்றச்சம்பவங்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதினபேரில் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் காஞ்சி தாலுக்கா காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபால் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு கிடைத்த தகவலின்பேரில்
1 ) டில்லிபாபு 40. 2 ) காளிதாஸ் 27. 3 ) முருகன் 23. ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி மற்றும் கன்னக்களவு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து.
மூவரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.8,50,000 மதிப்புள்ள 42 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் மேற்படி வழக்குகளில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியயுைம், களவுப்பொருட்களையும் கண்டுபிடித்த காஞ்சி தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்