விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஶ்ரீநாதா இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக்குப்தா இ.கா.ப, அவர்களின் தலைமையில், பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிபாபு, உதவி ஆய்வாளர் திரு.சண்முகம், மற்றும் காவலர்கள் தலைமையில் இன்று மன்னார்சாமி கோவில் அருகே ரோந்து பணியில் இருந்த போது
ப்ரெண்ட்ஸ் டீக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், கடந்த 2021மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன்னக்களவு திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளி வெங்கடேசன் (36), அசோக் நகர், சென்னை. என்பவரை கைது செய்து குற்றவாளியிடம் இருந்து 25, சவரன் நகை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.