காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரி க/பெ.தீனதயாளன், மற்றும் விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அஷ்டபுஜ பெருமாள் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த இராஜகுமாரி க/பெ.ராமதாஸ் ஆகியோரது வீடுகளில் கடந்த 12.08.21 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M. சுதாகர், அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டதின் காரணமாக உதவி ஆய்வாளர் திரு.தாமோதரன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரி பிரபாகர் 38 )பெருங்களத்தூர் என்பவரை கைதுசெய்து .
அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது . இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு விரைவாக குற்றவாளியை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.தாமோதரன் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்