அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் முன்னிலையில் 08/07/2020 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கனரக வாகன உரிமையாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. கூட்டத்தில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்து விவரிக்கப்பட்டன. கண்டிப்பாக அனைத்து கனரக வாகன ஓட்டுனர்களும் சாலை விதிகளை மதித்து மக்களின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்காமல் வாகனத்தை இயக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொண்டார்கள்.