திருவள்ளூர் : பொன்னேரி, எண்ணூர் துறைமுகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தச்சூர் கூட்டு ரோடு செல்வதற்கு மீஞ்சூர் வண்டலூர் சாலையை பயன்படுத்தாமல் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலை செல்வதால் DH சாலையில் அடிக்கடி விபத்துக்கள், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் செல்லும் வழியில் உயிரிழப்பு, பள்ளி கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமை, மக்களுக்கு இடையூறுகள், வாகன நெரிசல், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து உயிரிழப்பு ஏற்படுவதால் இதுகுறித்து பொது மக்களின் நலம் கருதியும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கனரக வாகனங்கள் செல்வதற்கு வழிமுறைகள் பின்பற்ற பொன்னேரி சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, மீஞ்சூர் பொன்னேரி இடையே உள்ள கண்டெய்னர் யார்டு பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மீஞ்சூரில் இருந்து யார்டு பகுதிக்கு செல்லும் சாலை பயன்படுத்த வேண்டும் எனவும், பொன்னேரிக்கு செல்லும் சாலையை பயன்படுத்தக்கூடாது எனவும்,, தச்சூர்கூட்ரோடு சாலையில் வாகன சோதனை சாவடி மற்றும் பொன்னேரி சாலை சத்துவா கண்டெய்னர் யார்டு அருகில் சோதனை சாவடி அமைக்கப்படுவதாகவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாகவும், சட்ட விதிகளை மீறும் லாரி ஓட்டுனர்களுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும், மேற்கண்ட விதிமுறைகள் வருகின்ற 28-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுவதாகவும் பொன்னேரி சார் ஆட்சியர் திருமதி.ஐஸ்வர்யா இராமநாதன். தெரிவித்தார் அப்போது பொன்னேரி தாசில்தார் திரு.செல்வகுமார், உடன் இருந்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்