திருச்சி : திருச்சி மாநகர் கே.கே.நகர் சுந்தர்நகர் பகுதியில் கடந்த (18.10.2022)-ந்தேதி செண்பகவள்ளி என்பவரின் வீட்டில் உள்ள மேல்தளத்தை வாடகைக்கு பார்ப்பதாக கூறி, சுமார் (45) வயது மதிக்க நபர் வீட்டின் உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயின் மற்றும் 1¼பவுன் 2 தங்க வளையல்களை கொள்ளையடித்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றதாக பெறப்பட்ட புகாரில், கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டதில் கேகேநகர் பகுதிகளில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், கடந்த (14.12.22) ந் தேதி மத்திய பேருந்து நிலையம் அருகில், வாகன தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, விசாரணையில் குற்றவாளி ரஞ்சித் வயது (41), என்பவர் கேகேநகர், சுந்தர்நகரில் மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதை தனிப்படையினர் உறுதி செய்தனர். மேலும் இதே போன்ற குற்றச்சம்பவங்களில் மேற்கண்ட குற்றவாளி ரஞ்சித் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக குற்றவாளியை கைது செய்தும், கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு சொத்தான 8½ சவரன் தங்க நகைகளை (மதிப்பு ரூ.2,15,000/) குற்றவாளியிடமிருந்து கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.