தூத்துக்குடி : கோவில்பட்டி தாலுகா ஊத்துப்பட்டி தெற்கு பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 47. இவர் மதுரை வந்திருந்தார் . மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது அவர் பயணம் செய்த ஆட்டோ பூம்புகார் கலைப்பொருட்கள் விற்பன நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது . அப்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததை அறிந்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தி நவநீத கிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டினார். அவர் அணிந்திருந்த நான்கு பவுன் செயினையும் அவர் வைத்திருந்த பேக்கையும் பறித்தார். பின்னர் அவரை அதே இடத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து ஆட்டோவுடன் தப்பிச்சென்றார். அந்த பேக்கில் அவர் பாஸ்போர்ட் வைத்திருந்தார். இந்த வழிப்பறி குறித்து நவநீதகிருஷ்ணன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் , பேக் பாஸ்போர்ட் பறித்த ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
                                











			
		    



