தென்காசி: தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி அரிகர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நண்பர்களுடன் சேர்ந்து பெரிய கத்தியை வைத்து கேக் வெட்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் முருகன் என்பவரின் மகனான சுரேஷ் 37, பெருமாள் என்பவரின் மகனான சக்திவேல் 25. மற்றும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகனான மாரியப்பன் 26.ஆகியோரை தென்காசி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்..
















