திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி, காந்தி ரோடு, நெ.169, சந்திரகுரலா தெருவை சேர்ந்த சரத்குமார் 23 , என்பவர் ஆரணி வழ போளூர் செல்லும் சாலை, முள்ளிப்பட்டு பாபா நகரில், பழ வியாபாரம் செய்த நபரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆரணி நகர காவல் ஆய்வாளர் திரு.P.கோகுல் ராஜன் அவர்கள் வழக்குபதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 110 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்