திருவாரூர்: வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்தக்காடு பகுதியில் இந்தியன் ஆயில் HP பெட்ரோல் பங்கில் இரவு பணியில் இருந்த நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற – 1.வினோத் (வயது -25). த. பெ. கண்ணனையன், மாரியம்மன் கோவில் தெரு, பட்டீஸ்வரம், கும்பகோணம் மற்றும் ஒருவர் கைது. சிறப்பாக செயல்பட்டு வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த வலங்கைமான் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் எச்சரித்துள்ளார்கள்.