திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்து, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த .கும்பகோணம், செல்வம் நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் தனுஷ் (வயது-19). மற்றும் (17) வயதுள்ள இருவர் உள்ளிட்ட மூன்று நபர்கள் கைது. மேலும் அவர்கள் அச்சுறுத்தி பணம் பறிக்க பயன்படுத்திய (TN -39 BJ 4880) இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, இடையூறு விளைவிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள்* எச்சரித்துள்ளார்கள்.