இராமநாதபுரம்: 23.02.2022 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் வசித்துவரும் ஜெயராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி வந்துகொண்டிருந்தார் அப்போது சித்திரைசாமி என்பவர் ஜெயராமன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜெயராமன் என்பவர் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் சித்திரைசாமி என்பவரை வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.