சென்னை: சென்னை நெற்குன்றம், பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ், வ/21 என்பவர் அயனம்பாக்கத்தில் உள்ள Biosafe Company என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஜோன்ஸ் 17.05.2021 அன்று இரவு நிறுவனத்தில் எதிரில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி ஜோன்ஸ்யிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்தபோது, சுதாரித்துக் கொண்ட ஜோன்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்து விடவே எதிரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
அப்போது ஜோன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியே வந்து தட்டிக்கேட்கவே மீண்டும் அவரிடம் பணம் ரூ.500 பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து ஜோன்ஸ், T5 திருவேற்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
T5 திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பிரதீப், வ/20, கீழ் அயனம்பாக்கம் 2.சரத்குமார், வ/22, மதுரவாயல் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு, அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.