தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. சம்பத் அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர் மற்றும் போலீசார் நேற்று (07.10.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3வது மைல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த துரைசிங் மகன் செல்லையா (எ) திருமணி சிங் 31 என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி செல்லையா (எ) திருமணி சிங்கை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி செல்லையா (எ) திருமணி சிங் என்பவர் மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.