திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், நெ.16/67, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த கார்த்தி 24, த/பெ ரமேஷ் பாபு என்பவர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்த நபரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த குற்றத்திற்காக ஆரணி நகர காவல் ஆய்வாளர் திரு.P.கோகுல்ராஜன் அவர்கள் ஆரணி நகர காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, குற்றவாளியை சிறையில் அடைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், துந்தரிகம்பட்டு கிராமம், அண்ணா தெருவை சேர்ந்த ரவி 32, த/பெ ராஜமாணிக்கம் என்பவர், துந்தரிகம்பட்டு ஏரிக்கரையின் அருகில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் திரு.V.J.முத்துக்குமார் அவர்கள் ஆரணி கிராமிய காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்து, குற்றவாளியை சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்