திருவண்ணாமலை: திருவண்ணாமலை பெருமாள் நகரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சகாதேவன், வயது 57 என்பவர் சொந்த வேலையாக, இன்று 21.06.2021-ம் தேதி மதியம் சுமார் 12 மணிக்கு, அவலூர்பேட்டை சாலை, பைபாஸ் ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே TN-25 BS 5563 என்ற பதிவு எண் கொண்ட பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி மடக்கி நிறுத்தி, கத்தியை கழுத்தில் வைத்து, பாக்கெட்டில் இருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்ததாகவும்,
அருகில் இருந்தவர்கள் அவர்களை பிடிக்க வந்த போது, கையில் வைத்திருந்த கத்தியை காட்டி எவனாவது பிடிக்க வந்தால் கத்தியால் குத்தி செஞ்சுடுவோம் என மிரட்டிவிட்டு ஓடிவிட்டதாகவும் கொடுத்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில்,
வழிப்பறி செய்த நபர்கள் திருக்கோவிலூர் சாலை, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, திருவண்ணாமலை நகர உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் சுருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் திரு.R.S.பார்த்தசாரதி, திருவண்ணாமலை கிழக்கு காவல் ஆய்வாளர் திரு.K.ஹரிகிருஷ்ணன், திருவண்ணாமலை நகர உதவி ஆய்வாளர்.திரு.சுந்தரேசன் மற்றும் உட்கோட்ட தனிப்படை காவலர்கள் அந்த இடத்திற்குச் சென்று.
அப்பு, வயது21, பாலாஜி (எ) கவிபாலாஜி, 23, ஆகியவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், இரண்டு கத்தி, 500 ரூபாய் பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.