சென்னை: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமலிங்கம், வ/37, லாரியை செங்குன்றம், வடபெரும்பாக்கம், லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு, லாரியில் தூங்கிக் கொண்டிருந்தாபோது, 2 நபர்கள் லாரியில் படுத்திருந்த ராமலிங்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த 1 செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது தொடர்பாக, ராமலிங்கம் M4 செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, M4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட 1.அன்பு, வ/23, 2.ஶ்ரீநாத், வ/23 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.