சென்னை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த வரதராஜு 41, என்பவர் 22.08.2021 அன்று காலை வியாசர்பாடி, அம்மன் கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த 2 நபர்கள் வரதராஜுவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணம் ரூ.600/-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி சம்பவம் குறித்து வரதராஜு P-5 எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரன் 21, வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர்.
மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான 17 வயது இளஞ்சிறாரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.200/- மற்றும் 1 கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேற்படி குற்றவாளி விக்னேஷ்வரன் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 வயது இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.