சென்னை: திருவொற்றியூரில் வசிக்கும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிவ், வ/28 மற்றும் அவரது தம்பி நாசிம், வ/15 ஆகியோர் 18.06.2021 அன்று இரவு எர்ணாவூர், சுனாமிநகர் குடியிருப்பு E.B அலுவலகம் அருகில் குல்பி ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நாசிமை கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ. 500/-ஐ பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இது குறித்து நாசிமின் அண்ணன் அபிவ் M-5 எண்ணூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
M-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு:குற்றப்பிரிவு) தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி அபிவ்-ன் தம்பி நாசிம்விடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 1.அந்தோணி (எ) பிசி வ/21, எர்ணாவூர், 2.கிஷோர்குமார் (எ) பட்டர் வ/22, எர்ணாவூர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பணம் ரூ.400/- மற்றும் 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.