சென்னை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்த எட்வின் மோசஸ், வ/25, என்பவர் 20.06.2021 அன்று வீட்டிலிருந்தபோது, ஆட்டோவில் வந்த 3 நபர்கள், எட்வின் மோசஸ் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி எட்வின் மோசஸை கொலை செய்துவிடுவதாக மிரட்டி ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக எட்வின் மோசஸ் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், R2 கோடம்பாக்கம் காவல் நிலைய ரோந்து வாகன காவல் குழுவினர் ரகளையில் ஈடுபட்ட 3 நபர்களையும் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
R2 கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள் அந்தோணி கிளமென்ட், வ/31 (ஆட்டோ ஓட்டுநர்), கோடம்பாக்கம் மற்றும் 17 வயதுடைய 2 இளஞ்சிறார்கள் என்பதும் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து, கத்தியைக் காட்டி மிரட்டியதும் தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் அந்தோணி கிளமென்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். பிடிபட்ட 2 இளஞ்சிறார்கள் மீதும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.