சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்தவர் தக்காளி வியாபாரி முனியாண்டி மணைவி பானு மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியத்துடன் அம்மு காதலித்து வந்தாக செல்லப்படுகிறது. இதை அறிந்த முனியாண்டி சிவகங்கை சேர்ந்த சபரிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே அந்த பெண் தனது மானாமதுரை வீட்டின் அருகே வசிக்கும் முன்னால் காதலன் பாலசுப்பிரமணியத்துடன் அடிகடி போனில் பேசி தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இதனை கணவன் கண்டித்ததை தொடர்ந்து கள்ளக்காதலன் பாலசுப்பிரமணியம் காதலியை சந்திக்கி சிவகங்கை வந்துள்ளார். அப்போது சபரி அண்ணன் காளிஸ்வரன் பார்த்துள்ளார். பாலகிருஷ்ணனுக்கும் பெண்ணின் கணவன் சபரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
உடனே பாலசுப்பரமணியன் சிவகங்கை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மானாமதுரையில் பெண்ணின் தந்தை முனியாண்டி காதலன் பாலசுப்பிரமணியத்தை கண்டித்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் கைகளப்பாக மாறியதை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் தந்தை தனராஜன் குணசேகரன் மகன் கார்த்திக்ராஜா வீட்டில் மறைத்திருந்த வாளை, அரிவாள் கொண்டு முனியாண்டி மற்றும் அவரது உறவினரை அன்பு கூரி தாக்கி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பெண்ணின் தந்தை முனியாண்டி உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த உறவினர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், அவரது தாயார் மாலா தந்தை தன்ராஜ் சகோதரி சத்யா ஆகியோரை கைது செய்தனர்.