கோவை : கோவை மாவட்டம், சுந்தராபுரம் ரிஜிஸ்திரார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் 23. இவர் தனியார் வங்கி ஊழியர் குறிச்சி எம். எம். பி. நகர் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது இவரை 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த நகை பணம் ரூ700 ஆகியவற்றைபறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். போத்தனூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் திரு.கதிர்வேல், வழக்கு பதிவு செய்து போத்தனூர் மைல்கல், பாரதிநகரை சேர்ந்த சாருக்கான் என்ற பெருக்கான் (24) ரியாஸ் கான் (28) காஜா மொய்தீன் (23) ஆகியோரை கைது செய்தார். 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.