கோவை: கோவை பாரதி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 54. இவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில வசிப்பவர் மகேஷ் குமார் 40 இவர்களுக்கு இடையே தண்ணீர் எடுக்க மோட்டார் போடுவதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் , கணேசன் என்ற வல்லரசு உட்பட4 பேர் சேர்ந்து லட்சுமணன் வீட்டில் புகுந்து அவரை தாக்கி கத்தியால் குத்தினார்கள். இதில் லட்சுமணன் படுகாயமடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து லட்சுமணன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேஷ்குமார் 40 கணேசன் என்ற வல்லரசு 40 ஆகியோரை கைது செய்தனர்.
