ஈரோடு : தமிழக போலீஸ் வீரவணக்க நாளான இன்று 21.10.2020 தமிழக அதிரடிப்படையில் 1993 ஆம் ஆண்டு சந்தன மரம் கடத்தல் மன்னன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலாறு என்னுமிடத்தில் கண்ணிவெடி தாக்கி உயிரிழந்த காவலர் திரு.சாமிநாதன் காவலர் எண் 1528 என்பவருக்கு அவரது இல்லத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு V செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு M செல்வராஜ், உதவி ஆய்வாளர் திரு M துரைசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு K ரவிச்சந்திரன், திரு D மேகநாதன், தனிப்பிரிவு தலைமை காவலர் திரு M கலைமணி, அதிரடிப் படை காவலர் திரு முனிராஜ், மற்றும் சென்னிமலை காவல் நிலைய ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அவரது தாயார் திருமதி வள்ளியம்மாள்(80) அவர்களுக்கு பொன்னாடை போத்தி கௌரவித்தும் சென்னிமலை காவல் நிலையத்தின் சார்பாக உதவித் தொகையாக ரூபாய் 10,000 மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா