திருவண்ணாமலை : கண்ணமங்கலத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாடக கலைஞர்கள் தத்ரூபராக எமன் தர்மராஜா வேடமணிந்து மேளதாள முழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திரு.எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி திரு.கோட்டீஸ்வரன் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாக நாடக தெரு கூத்து கலைஞர்கள் எமன் தர்மராஜா வேடமணிந்து சாலை விபத்து குறித்து தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். மேலும் தீபாவளி நெருங்குவதால், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.
பின்னர் மேளதாள முழங்க பெண்கள் நடனமாடி சாலை பாதுகாப்பு குறித்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்டவகளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடித்து காட்டினார்கள். மேலும் போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினார்கள். இதில் நாடக கலைஞர்கள் பொதுமக்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்