சிவகங்கை : முதல் மனிதன் என்ற படம் உலகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் என்ற கருத்தை மையமாக கொண்ட மதநல்லிணக்க திரைப்படத்தை உலகெங்கும் வெளியிட்டு மக்களிடையே சமத்துவம் சகோதரத்துவம் பொதுவுடமை என்ற தாரக மந்திரத்துடைய கருத்தை விழிப்புணர்வு புகட்டும் கதைக்கருவை விதைத்த தயாரிப்பாளருக்கு மரியாதைக்குரிய அல்ஹாஜ். NM .ஹுசைன் (NMH) அவர்களுக்கு காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில்
அல்ஹாஜ். NM .ஹுசைன் (NMH), (தலைவர், சிவகங்கை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (SIDISSIA),தயாரிப்பாளர், NMH இண்டர்நேஷனல் பிக்சர்ஸ், அவர்களுக்கு சமூக நல்லிணக்க தேசிய விருது (All india book of records, Se. Ve world record forum,) சாதனை அமைப்பின் நிறுவனர் டாக்டர்செ.வெங்கடேசன் அவர்களால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக உலகத்தில் வாழும் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் கருத்தை மக்களிடையே இப்படத்தின் மூலம் கொண்டு வந்த இயக்குனர் ராஜராஜ துரை அவர்களுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி