காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரமேரூர் முத்து நகர், கிருஷ்ணா அவென்யூ – ல் வசிக்கும் காஜா பேக் 49 என்பவர் அவரது உறவினரின் 16 ம் நாள் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள அவரது குடும்பத்தாருடன் ஆரணிக்கு சென்றதாகவும்,
அச்சமயம் அடையாளம் தெரியாத நபர் மேற்படி பூட்டிய வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து பீரோவிலிருந்த தங்க நகைகளை திருடிசென்றது சம்பந்தமாக உத்திரமேரூர் காவல் நிலையத்தில் 02.07.2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர், அவர்கள் இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரியுைம், களவுப்பொருட்களையும் கண்டுபிடிக்க உத்தரவிட்டதின் பேரில், உத்திரமேரூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்,
பல்வேறு கண்ணக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மணிகண்டன் ( எ ) திருப்பூர் மணிகண்டன் 43 சீத்தாராமன்பேட்டை, கே.வி.குப்பம், காட்பாடி தாலுக்கா, வேலூர் மாவட்டம் என்பவர் மேற்படி குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவரவே அவரை கைது செய்து.
அவரிடமிருந்து களவுப்பொருட்கள் சுமார் ரூபாய் 1.80,000/- மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாகவும் புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு எதிரியை பிடித்து களவுப்பொருட்களை மீட்ட தனிப்பபடையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.