சென்னை: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட N3 முத்தையால் பேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அம்மன் கோயில் தெரு, அரசு முஸ்லீம் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகாமையில் குப்பை கொட்டும் இடத்தில் நேற்று 14-7-2020 காலை ஆண் குழந்தை ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள், N3 முத்தையால் பேட் காவல் ஆய்வாளர் திரு.அப்துல் காதர் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
குழந்தை இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் திரு.அப்துல் காதர், கண்டுஎடுக்கப்பட்ட ஆண் குழந்தையை ஸ்டான்லி குழந்தைகள் மருத்துவமனையில் ஒப்படைத்தார். தற்போது அந்த அழகான ஆண் குழந்தை நலமாக உள்ளது. இது போன்று குழந்தை எங்கேனும் கண்டெடுக்கப்பட்டால், உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்திற்கோ அல்லது குழந்தை பாதுபாப்பு எண் 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு, காவல் ஆய்வாளர் திரு.அப்துல் காதர் கேட்டுக் கொண்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா