கோவை : கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் உள்ள எல்.ஜி நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன் .இவரது மனைவி அம்பிகா (வயது 22 )இவர்களுக்கு 25 -11 -20 20 அன்று திருமணம் நடந்தது. பெண் வீட்டில் ரூ 1 லட்சம் ரொக்கமும் 7 பவுன் நகையை கொடுத்தனர். இந்த நிலையில்கணவர் கோபிநாதன் வீட்டில் அம்பிகாவிடம் மேலும் ரூ 2 லட்சம் பணமும், 8 பவுன்நகையும் வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தினார்களாம். வரதட்சனை வாங்கி வராமல் இங்கு வாழ முடியாது என்று அவரை பெற்றோர் வீட்டுக்கு துரத்தி விட்டனர் .இதுகுறித்து அம்பிகா நீதிமன்றம் மூலமாககோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் கணவர் கோபிநாதன் மாமியார் சாந்தி , மாமனார் சண்முகம் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை உட்பட2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
