திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடந்த 2022-ம் வருடம் ஊர்க்காடு, மேல காலணி, நடுத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (30/22) என்பவரும் சுதா 28. என்பவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 02.02.2022 அன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுதா பேச்சிமுத்துவை தனது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து பேச்சிமுத்துவின் தாயார் மாரியம்மாள் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி திரு. பன்னீர்செல்வம் அவர்கள் குற்றவாளியான சுதாவிற்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் பாராட்டினார்.