கோவை: கோவைகாரமடை பகுதியை சேர்ந்தவர் விக்ரம் 20. கட்டிட தொழிலாளி. இவருக்கும் காரமடை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டது. மாணவியிடம் விக்ரம் அடிக்கடி பேசி வந்தார். நேற்று முன்தினம் இரவு மாணவியை சந்தித்த விக்ரம் அவரிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திசென்றார்.
அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாக வும் கூறிபாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விசயத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் மிரட்டியுள்ளார்.
விக்ரம் பிடியில் இருந்து தப்பி வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறினார். இது தொடர்பாக காரமடை போலீசார் சிறார் பாலியல் பலாத்கார (போக்சோ சட்டம்) பிரிவில் வழக்குப் பதிந்து விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.