கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கும் கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கட்டாய திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் வந்தது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார்விசாரணை மேற்கொண்டு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர் மீதும் இளைஞரின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது…16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடுசிறையில் அடைக்கப்பட்டார்.