மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த குமார். குடும்பத்தினருடன் கொடைக்கானல் வந்தார். குணா குகை செல்ல நுழைவு கட்டணமாக 6 பேருக்கு ரூ. 60 செலுத்தினார். சூழல் சுற்றுலா காவலர், நீங்கள் வெளிநாட்டினாரா என கேட்க மலேசியா என கூறி உள்ளனர். வெளிநாட்டினருக்கு ரூ.100 கட்டணம் என அவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறான அறிவிப்பு எதுவும் இங்கு இல்லையே என குமார் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுடன் வந்த பயணி தனிஷ் இதை வீடியோ எடுத்தார். இதில் ஆவேசமடைந்த வனவர் மாசாணமுத்து அலைபேசியை பறித்து தனீஷை தாக்கினார். தொடர்ந்து வனத்துறையினர், சுற்றுலா பயணிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது.
இருதரப்பிலும் புகார் பெற்ற கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர். குணா குகை, மோயர் சதுக்கம், பில்லர் ராக், பைன் பாராஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் பயணிகளிடம் வனத்துறையினர் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. எனவே அரசு இவ்விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து ஒழுங்கீனமாக நடக்கும் வனத்துறையினரை களையெடுக்க வேண்டும் இன்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா