வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ராஜேஷ்கண்ணன், தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில் போதை பொருட்கள் கடத்தல், விற்பனை தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், மருந்தக நிர்வாகிகளிடம் தங்கள் கடைகளுக்கு மருந்துகள் வாங்க வரும் பொதுமக்களிடம் டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்து சீட்டு பெற்று அதன் பின்னரே மருந்துகள் வழங்க வேண்டும். சில மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்துகின்றனர். இவை தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.