திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.V.A.ரவிச்சந்திரன், அவர்கள் மேற்பார்வையில், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் திரு.G.சாலமோன்ராஜா, அவர்கள் தலைமையில் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், கேளூர் கிராமம் மணிகண்டன் வயது (45), என்பவர் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த 6.600 கிலோ கிராம் எடையுள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவருடைய கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.