தென்காசி : தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே முருகன் என்பவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கைப்பற்றப்பட்டு உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூபாய் , 10,000/- அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது .இதேபோல் புகையிலை விற்பனை ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்