கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் கூறியிருப்பதாவது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனாவசியமாக வாகனங்களில் செல்ல வேண்டாம். வாகனங்களில் முதல்முறை செல்வோரை நிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும். தொடர்ந்து தேவையின்றி பயணம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்யலாம்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டில் உள்ள யாராவது ஒருவர் மட்டும் வந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கொடிய வைரஸ் தொற்று நோயில் இருந்து விலக முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்