திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் – பான் மசாலா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி ஆய்வு. தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் படி பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத புகையிலைமற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் சிறப்பு வேட்டைநடத்தப்பட்டு அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி (25.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் திருவாரூர் பகுதியில் உள்ள பெட்டி கடையில் பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என நேரடியாக திடீர் ஆய்வு செய்தார்கள். பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும் வரும் காலங்களில் பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினார்கள்.