திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முழுவதும் பான்மசாலா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு ஒழிக்கும் பொருட்டு காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. S.ஜெயக்குமார், M.Sc(Agri).,* அவர்களின் உத்தரவு படி தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி (12.12.2023) திருவாரூர் மாவட்டத்தில் பெட்டி கடைகளில், பான்மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.